Tuesday, January 15, 2013

ஏண்டா இப்பிடி..! எங்கிட்டு இருந்து இப்படி எல்லாம் கெளம்புரானுங்க..

            ஊருக்குள்ள சில பப்ளிக்குட்டி பைத்தியமெல்லாம் இருக்கும். தன்னோட பேரு வரணும்கிறதுக்காக எத வேனாலும் பண்ண ரெடியா இருக்கும். (பவர் ஸ்டார் ரசிகர்கள் அமைதி காக்க.. மேட்டர் அதில்ல வேற..!).
     ஆனா சீரியஸாவே சில பேர் இப்படியெல்லாம்  அலையிராங்க..  அதில ஒன்னு இன்னிக்கு பாத்தது.. 1/15/2013

 
        இப்போ டிஸ்கவெரி சேனல்ல ஒரு நிகழ்ச்சி பாத்தேன்.. அழிவுகளுக்கான அரசன்னு ஒரு ப்ரோக்ராம்.. அதுல ஒருத்தருக்கு அவார்ட் குடுத்தாங்க.. அவர் என்ன பண்ணிருந்தார்னா,
ஒரு மிக்ஸி கண்டு பிடிச்சிருந்தார்.. அந்த மிக்ஸில பேஸ் பால், ஐ பேட்- னு எல்லா பொருளையும் மாவாக்குனாறு, அதாவது ஒலியின் வேகத்துல பாதி ஸ்பீட்-ல அரைக்க வச்சாராம் கிட்டதட்ட 560 கிமீ வேகம்னு சொன்னதா ஞாபகம்.. இதுல என்ன கொடுமைனா கடைசியா அவருக்கு ஒரு அவார்ட் குடுத்தானுங்க, மனுசன் அதயும் போட்டு மிக்ஸில அரச்சுட்டான் அந்த பயபுல்ல.. ஏண்டா இப்பிடி..!

No comments:

Post a Comment