ஆரம்பமாயிடுச்சு, எல்லோரும் ஓட்டு வேட்டைக்கு கிளம்பி வந்துட்ருப்பாங்க,
மறக்காம ஓட்டுப் போடுங்க... சரி விஷயத்துக்கு வருவோம்..
இந்த தேர்தல்ல யார் ஜெயிக்கிறாங்களோ இல்லயோ, பரிதாபமா
தோற்கப் போவது தமிழ்நாட்டு மக்களான நாம தான்...
அது ஏங்க... இலவசம் லாம் குடுக்கப் போறாங்க, அப்புறம் என்ன
கவலைனு நினைக்கிறீங்களா.... ஒரு அருமையான் பழமொழி
இருக்குங்க.. “ மீன் குடுக்குறத விட, மீன் பிடிக்க கத்துக் குடுங்க,
அவனோட வாழ்க்கை முழுவதும் பயனுள்ளதா இருக்கும்”னு
ஆனா, அத எவனும் செய்ய மாட்டனுங்க... இப்ப குடுக்குற இலவசம்லாம்
எப்பிடி குடுப்பாங்க...
நாம நாடு முன்னேறுறதுக்காக ”வரி”னு குடுக்குறோமே அந்த பணத்துல தான்,
அதுவும் பத்தலைனா நம்ம பேர சொல்லி கடன் வாங்குவானுங்க..
இந்த விசயம் இன்னியோட முடியாது நாளைக்கு அதுக்கு வட்டியெல்லாம்
கட்டனும், குடுத்தவன் சும்மா விடுவானா..
அப்புறம் எதிர்காலத்துல மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களுக்கு பணம்
இருக்காது, அதான் இலவசம் குடுத்தம்லனு சொல்லுவானுங்க...
தொலைநோக்கு சிந்தனை உள்ளவன் ஒருத்தன் கூடவா 6 கோடிப்
பேர்ல இல்லைனு நினைக்கிறீங்கலா... இருப்பாங்க...
ஆனா அவங்களுக்குன்னு சில கடமைகள் இருக்கும்ங்க..
”ஜெயம் கொண்டான்” படத்துல ஹீரோ கடைசியா சில வசனம் ரௌடிய பாத்து
பேசுவான், “ நீ ரோட்ல ஒருத்தன போட்டு அடிக்கிறப்ப, பாத்துட்டு ஒதுங்கி
போறவன்லாம் உனக்கு பயந்து போறான்னு நினைக்கிறியா, இல்லடா... எனக்கு
மட்டும் குடும்பம் கொழந்த குட்டினு இல்லைனா உன்ன வெட்டிட்டு ஜெயிலுக்கு
போயிருவண்டான்னு நெனைப்பாங்கடா”னு சொல்லுவான்,
அதே மாதிரி தான்...
நாம ஒரு வட்டத்துக்குள்ள சிக்கிட்டதால தான் இதெல்லாம் பாத்துட்டு, தூரமா
நின்னு, கடைல சில புத்தகத்த வாங்கி படிக்கிறதோட நம்ம சமூக அக்கறை
முடிஞ்சுருது... எதாவது பண்ணனும்ங்க...
நாம எப்ப ஜெயிக்கிறது...

No comments:
Post a Comment